ADDED : ஜூன் 16, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: பில்லாலி தொட்டியை சேர்ந்த ஞானவேல் மகன் பிரதீஷ், 22; கொத்தனார். இவரும், அதே பகுதியை சேர்ந்த தண்டபாணி மகள் சோனியா, 19; என்பவரும் காதலித்துள்ளனர். பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, பாதுகாப்பு கேட்டு இருவரும், நெல்லிக்குப்பம் போலீசில் தஞ்சமடைந்தனர். இருதரப்பு பெற்றோரையும் அழைத்து, இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சமாதானம் செய்து அனுப்பினார்.