/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜே.இ.இ., தேர்வில் மதிப்பெண் குறைவு: கடலுாரில் மாணவி தற்கொலை
/
ஜே.இ.இ., தேர்வில் மதிப்பெண் குறைவு: கடலுாரில் மாணவி தற்கொலை
ஜே.இ.இ., தேர்வில் மதிப்பெண் குறைவு: கடலுாரில் மாணவி தற்கொலை
ஜே.இ.இ., தேர்வில் மதிப்பெண் குறைவு: கடலுாரில் மாணவி தற்கொலை
ADDED : மே 07, 2024 11:23 PM
கடலுார் : கடலுாரில் ஜே.இ.இ., தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மனமுடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார், பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் மகள் தர்ஷினி, 17; கடலுாரில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், உயர்கல்வியில் சேர ஜே.இ.இ., தேர்வு எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 45.4 சதவீத மதிப்பெண் மட்டுமே பெற்றதால் மனமுடைந்த அவர், கடந்த 26ம் தேதி, வீட்டில் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
இதையறிந்த குடும்பத்தினர், அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.