/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
காற்று மாசால் நிறம் மாறும் நுரையீரல்: கலைக்கோவன்
/
காற்று மாசால் நிறம் மாறும் நுரையீரல்: கலைக்கோவன்
ADDED : ஜூலை 28, 2024 07:10 AM

காற்று மாசு நிறைந்த சூழலில் வாழும் போது, நுரையீரல் நிறம் மாறுகிறது என, கடலுார் கோவன்ஸ் நுரையீரல் சிகிச்சை மைய, நுரையீரல் மருத்துவர் கலைக்கோவன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
காற்றில் உள்ள நுண்ணிய மாசு துகள்களின் அளவு 2.5 மைக்கரானுக்கும் அதிகமாக இருந்தால் பல வித நோய்கள் வரலாம். தற்போது, சென்னை உட்பட அனைத்து பெருநகரங்களிலும் குறிப்பாக காஞ்சிபுரத்தில் 10 மடங்கு அதிகமாக 100 மைக்கரான் உள்ளது.
காற்றில் உள்ள நுண்ணிய துகள்களை சுவாசிக்கும் போது, நுரையீரலுக்குள் சென்று, தங்கி விடும். தொடர்ச்சியாக மாசு நிறைந்த சூழலில் வாழும் ரோஜா பூ இதழின் பிங்க் நிறத்தில் இருக்கும் நுரையீரல் நிறம் கருப்பாக மாறி விடுகிறது.
இதில் உள்ள நைட்ரிக் அமிலம், கார்பன் மோனாக்சைடு போன்ற நச்சு வாயுக்களால் நரம்பு மண்டலம், மூளை பாதிக்கப்படும். காற்று மாசால் பார்வை கோளாறு, நினைவாற்றல் பாதிப்பு, படிக்கும் திறன் குறைவது, அடிக்கடி தொற்று நோய் பாதிப்பு, கேன்சர் அபாயத்தையும் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது.
குழந்தை பருவத்தில் இருந்தே மாசு நிறைந்த சூழலில் இருந்தால் 60 வயதில் வர வேண்டிய உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கேன்சர் 50 வயதிலேயே வந்து விடும்.
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் காற்று மாசான சூழலில் இருந்தால் எடை குறைந்த குழந்தை பிறக்கும். கடலுாரில் சிகரெட் பழக்கம் இல்லாத இளம் வயதினரின் நுரையீரல் வழக்கமான ரோஜா இதழ் போன்ற பிங்க் நிறம், கருப்பு, பிரவுன் நிறமாக மாறியிருப்பதை காண முடிகிறது.
ஆண், பெண் இருபாலருக்கும் 40 வயதிலேயே நுரையீரலின் திறன் குறைகிறது. நிறமும் மாறுகிறது. மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பது நுரையீரலை மட்டும் பாதிப்பதில்லை. அதிக ஆழத்திற்கு சென்று மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
எனது அனுபவத்தில் 22 வயது கர்ப்பிணிக்கும், 25 வயது கல்லுாரி மாணவருக்கும் நுரையீரல் கேன்சர் இருப்பதை கண்டுபிடித்தோம். காற்று மாசில் இருந்து நுரையீரலை பாதுகாப்பது எளிது. ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை 100 சிகரெட் புகைக்கு சமம். தினசரி 8 மணி நேர துாக்கம் அவசியம்.
உணவில் பழங்கள், காய்கறிகள் அதிகமாக சேர்க்க வேண்டும். இரவு நேரத்தில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகள் சாப்பிட வேண்டும். சிகரெட்டை தவிர்ப்பது நல்லது. இரண்டு வாரத்திற்கு மேல் காரணம் இல்லாமல் உடல் எடை குறைதல், எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் நுரையீரல் தொடர்பான பிரச்னை தெரியவரும். மேலும், விவரங்களுக்கு கோவன்ஸ் நுரையீரல் சிகிச்சை மையம், மஞ்சக்குப்பம், கடலுார், செல்-9698300300 என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.