ADDED : ஜூலை 04, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
பெண்ணாடம், ஜூலை 5–
பெ.பொன்னேரி புனித தோமையார் அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி நடந்தது.
பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியில் புனித தோமையார் அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா, கடந்த ஜூன், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினசரி மாலை கூட்டு திருப்பலி; நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் ஆடம்பர தேரில் தோமையார் அன்னை பவனி நடந்தது. இரவு 10:30 மணியளவில் கொடியிறக்கத்துடன் ஆண்டு பெருவிழா நிறைவடைந்தது.
