ADDED : ஜூன் 20, 2026 10:33 PM
கடலுார்: கடலுார் முதுநகரில், மா.கம்யூ.,சார்பில் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாநகர செயலாளர் அமர்நாத், கைத்தறி சங்க செயலாளர் தட்சிணாமூர்த்தி, வாலிபர் சங்க பொருளாளர் கலைவாணன், மாதர் சங்கம் மனோரஞ்சிதம் உட்பட பலர் பங்கேற்றனர். ஆ
ர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் பெயர்மாற்றத்தைக் கண்டித்தும், நுாறுநாள் வேலையை 200, நாளாக உயர்த்தி 700 ரூபாய் ஊதியம் வழங்கக்கோரியும், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும், என்.எல்.சி.,நிறுவனத்தின் மூன்று சதவீத பங்கு விற்பனையை எதிர்த்தும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி
அதேபோல, திட்டக்குடி பஸ் நிலையத்தில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மூத்த நிர்வாகிகள் ராஜேந்திரன்ல மகாலிங்கம், மாவட்டக்குழு உறுப்பினர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சின்னதம்பி, வட்ட குழு உறுப்பினர் விஸ்வநாதன், மாதர் சங்க வட்ட செயலாளர் புஷ்பவல்லி உட்பட பலர் பங்கேற்றனர். வட்டக்குழு உறுப்பினர் மாயவன் நன்றி கூறினார்.
