ADDED : ஆக 06, 2026 09:52 PM
கடலுார்: கடலுார் ஜவான்ஸ்பவன் அருகில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் சேட்டு தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அமர்நாத் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்புராயன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனிவேல், பக்கீரான், ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் புருஷோத்தமன், மனோகர், காசிநாதன், மாநகர குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், தமிழ்மணி கண்டன உரையாற்றினர். ஜவான்ஸ்பவன்–கம்மியம்பேட்டை இணைப்பு சாலையில் வழிப்பறி சம்பவங்களை தடுக்க மின்விளக்குகளை எரிய வைக்க வேண்டும். இப்பகுதியில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். கெடிலம் ஆற்றில் புதிய பாலம் மற்றும் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும்.
ரயில்வே நிலையம் அருகில் உள்ள இந்திரா நகரில் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் மக்களுக்கு மனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
