ADDED : செப் 14, 2024 07:26 AM

கடலுார்: மா.கம்யூ., அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மறைவையொட்டி, அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் நடந்தது.
கடலுார் மா.கம்யூ., கட்சி சார்பில் ஜவான் பவன் அருகில் இருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு, மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் பஞ்சாட்சரம் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் அண்ணா மேம்பாலம், பாரதி ரோடு வழியாக தலைமை தபால் நிலையம் அருகில் நிறைவடைந்தது.
இரங்கல் கூட்டத்தில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க., மாநகர செயலாளர் ராஜா, அவைத்தலைவர் பழனிவேல் பங்கேற்று பேசினர்.
அப்போது, மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு வாலண்டினா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், கருப்பையன், சுப்பராயன், ராஜேஷ், கண்ணன், காங்., மாவட்ட தலைவர் திலகர், மாநில துணைத் தலைவர் சந்திரசேகரன், துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.