/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
திருநங்கை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
/
திருநங்கை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
ADDED : பிப் 26, 2025 05:44 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே திருநங்கையை அடித்து கொலை செய்த வழக்கில், முக்கிய குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள அரசு காப்புக்காட்டில் கடந்த 18ம் தேதி மாலை, உடலில் காயங்களுடன் 35 வயது மதிக்கத்தக்க திருநங்கை சடலம் கிடந்தது. தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில், இறந்து கிடந்த திருநங்கை தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை அடுத்த கோவிலடி, சுக்கம்பார் கிராமத்தை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் மகன் யூஜின் வில்லியம் ஜோசப், 31 என்பதும், திருநங்கையாக மாறிய இவர், சுருதி என்ற பெயரில் வலம் வந்தது தெரிந்தது.
மேலும், விருத்தாசலம், கடலுார் சாலையில் உள்ள மக்புல் காலனியை சேர்ந்த மக்புல் ெஷரிப், 68, வீட்டில் சுருதியை கொலை செய்து, ஆட்டோ வில் எடுத்து வந்து, காப்புக்காட்டில் வீசியது தெரிந்தது.
அதைத்தொடர்ந்து, மக்புல் ெஷரிப், சக திருநங்கைகள் உள்ளிட்ட 6 பேரை ஏற்கனவே கைது செய்த போலீசார், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விருத்தாசலம் பழமலைநாதர் நகரை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் சந்திரசேகர், 38, என்பவரை நேற்று கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள 17 வயது திருநங்கையை தேடி வருகின்றனர்.