தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கியவர் கைது

பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கியவர் கைது

பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவரை தாக்கியவர் கைது


ADDED : ஜூன் 09, 2026 04:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மதுராந்தகநல்லுாரில் தனியார் பஸ்சை மறித்து டிரைவரை அசிங்கமாக திட்டி தாக்கி இருவரில்   ஒருவரை போலீசார் கைதுசெய்தனர்.

சேத்தியாத்தோப்பு அடுத்த தென்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செல்வம்,60; தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு சேத்தியாத்தோப்பு பஸ் நிலையத்திலிருந்து பஸ்சில் பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுராந்தகநல்லுார் மேலக்கரை பஸ் நிறுத்தம் அருகே வளைவில் ஹாரன் அடித்து சென்றுள்ளார்.

இரவு 9.00 மணியளவில் அங்கு சாலையில் குடிபோதையில் நின்றுகொண்டிருந்த  இளைஞர்கள் இருவர்  பஸ்சை வழிமறித்து ஏன்டா வேகமாக ஹாரன் அடித்து வருகிறாய் என கேட்டு பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர் செல்வத்தை தாக்கிவிட்டு தப்பினர்.

காயமடைந்த  செல்வம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். செல்வம் புகாரின் பேரில் ஒரத்துார் போலிசார் வழக்குப் பதிந்து டிரைவரை தாக்கியவர்கள் குறித்து விசாரணை செய்தனர்.

இதில் மதுராந்தகநல்லுார் மெயின்ரோட்டைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் பார்த்தசாரதி,32; பெரிய தெருவைச் சேர்ந்த ராஜன் மகன் சரவணன் ஆகியோர் என தெரியவந்தது. போலீசார் பார்த்தசாரதியை கைது செய்து தலைமறைவான சரவணனை தேடி வருகின்றனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us