ADDED : மார் 06, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: ஆலடி அருகே கூழாங்கற்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்பேட்டை அடுத்த ஆலடி சப் இன்ஸ்பெக்டர் துரைகண்ணு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். கொக்காம்பாளையம் கிராமத்தில், அப்பகுதியை சேர்ந்த தங்கதுரை மகன் ஐயப்பன், 23, என்பவர், அவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்து ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கூழாங்கற்களை வெளியே எடுத்து, சலித்து விற்பனைக்கு குவித்து வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, ஐயப்பனை கைது செய்தனர். ஜே.சி.பி., வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.