ADDED : செப் 09, 2024 04:45 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், 13 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த நிலையில் சொந்த ஊருக்கு திரும்பியவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் சிவசக்தி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கோபிநாத், 36; இவர், கடந்த 2010ம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் போலீ சாரால் கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் வெளியே வந்த அவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டார்.
இதையடுத்து கோபிநாத்திற்கு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. எஸ்.பி., ராஜாராம் மற்றும் டி.எஸ்.பி., லாமேக் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து திரும்பிவந்த கோபிநாத், சிதம்பரம் சிவசக்தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். இதையறிந்த போலீசார் 13 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்தனர்.