/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மஞ்சக்குப்பம் அரசு பள்ளி மாணவர்களுக்குஎஸ்.பி., ராஜாராம் பரிசு வழங்கி பாராட்டு

ADDED : ஜூன் 27, 2024 03:13 AM

கடலுார்: உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு ஓவியப்போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு எஸ்.பி., ராஜாராம் பரிசுகள், சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கடலுார் மாவட்ட காவல் துறை சார்பில் உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓவியப் போட்டி கடலுார் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. ஒவிய போட்டி மூன்று பிரிவுகளில் 60 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
6 முதல் 8-ம் வகுப்பு பிரிவில் 8-ம் வகுப்பு மாணவர் ஆகாஷ் முதல் இடம் பிடித்து வெற்றிப் பெற்றார். 2ம் இடம் வெற்றிவேல், 3ம் இடம் ஆதவன். உயர்நிலை வகுப்பு பிரிவில் முதல் பரிசு 9-ம் வகுப்பு ஜனார்த்தனன், 2ம் பரிசு 10-ம் வகுப்பு தினகரன், 3ம் பரிசு 9-ம்வகுப்பு மோகன் பெற்றார்.
மேல்நிலை வகுப்பு பிரிவில் 12ம் வகுப்பு மாணவன் சந்தோஷ் முதல் பரிசு, அபிநயா 2ம் பரிசு, 11ம் வகுப்பு குருசந்திரன் 3ம் பரிசு பெற்றனர். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., ராஜாராம், பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி.,க்கள் பிரபு, சவுமியா, புதுநகர் எஸ்.ஐ., கதிரவன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.