/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் கல்லுாரிக்கு மஞ்சப்பை விருது
/
மகளிர் கல்லுாரிக்கு மஞ்சப்பை விருது
ADDED : ஆக 31, 2024 03:00 AM
கடலுார்: கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரிக்கு, சென்னையில் நடந்த விழாவில் மஞ்சப்பை விருது வழங்கப்பட்டது.
பிளாஸ்டிக் தவிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றில் சிறந்து விளங்கினால், மஞ்சப்பை விருது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்படுகிறது. இந்தாண்டு, கடலுார் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு, விழிப்புணர்வு பேரணி உட்பட பல்வேறு பணிகள் முன்னெடுத்து செய்ததையொட்டி மாநில அளவில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
அதற்காக ரொக்க பரிசாக ரூ. 3 லட்சம் மற்றும் சான்றிதழ் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது. விருதை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். கல்லுாரி முதல்வர் சபீனாபானு மற்றும் மஞ்சப்பை திட்ட முதன்மை அதிகாரி கவிதா பெற்றுக்கொண்டனர்.