ADDED : மார் 09, 2025 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : கிள்ளையில், மாசி மகத்திருவிழா வரும் 14ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, கிள்ளை போலீஸ் நிலையம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், காவல்துறை குறிப்பிடுகின்ற வழித்தடங்களில் மட்டும் வாகனங்கள் செல்ல வேண்டும், போக்குவரத்திற்கும்,பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் ஊர்வலம் செல்ல வேண்டும், சுவாமி சிலைகளை ஏற்றிவரும் வாகனத்தில்அதிகளவில் ஆட்களை ஏற்றிவரக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனங்களில் மற்றும் ஊர்வலத்தில் வருவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர்.கூட்டத்தில், சப் இன்ஸ்பெக்டர் மகேஷ், குப்புசாமி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.