ADDED : மார் 27, 2024 11:23 PM
அ நிறம் | அளவு
புதுச்சத்திரம் : வயிற்றுவலி காரணமாக கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மயிலாடுதுறை அடுத்த குமாரக்குடியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் வேல்முருகன், 35; கொத்தனார். இவர் புதுச்சத்திரம் அடுத்த நஞ்சலிங்கம்பேட்டையில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. நேற்று வலி அதிகமாகவே விரக்தியடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
