ADDED : செப் 14, 2024 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: மா.கம்யூ., அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவையொட்டி, பண்ருட்டியில் அனைத்துக் கட்சியின் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், இ.கம்யூ., துரை, மா.கம்யூ., உத்திராபதி, சிவக்குமார், குணசேகர், தி.மு.க., அவைத் தலைவர் ராஜா, நகர பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் பரணி சந்தர், கவுன்சிலர் சண்முகவள்ளி பழனி, நகர இளைஞரணி அமைப்பாளர் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.