ADDED : செப் 09, 2024 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: அண்ணாகிராமம் ஒன்றியம் சுந்தரவாண்டியில் ம.தி.மு.க., கொடி ஏற்று விழா நடந்தது.
அண்ணாகிராமம் ஒன்றியம் சுந்தரவாண்டி கிளையில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கிளை செயலாளர் காசிநாதன் தலைமையில், கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமலிங்கம் கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், பொதுக்குழு உறுப்பினர் குமார், நகர செயலாளர் ஆதித்தன், சிவா, முருகன், பத்மநாபன், திருக்குமரன், கணேசமூர்த்தி, ரவிவர்மன், திருலோகசந்தர் கலந்து கொண்டனர்.