
புவனகிரி : புவனகிரி அரசு ஆண்டுகள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையுடன், புவனகிரி அரிமா சங்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமை நடத்தியது.
அரிமா சங்கத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். பொருளாளர் பாலு வரவேற்றார். செயலாளர் முரளி, ஓய்வு பெற்ற கல்வி அலுவலர் சுப்ரமணியன், சங்க இயக்குனர்கள் சிவக்குமார், எ.சிவக்குமார், ஜெகநாதன் முன்னிலை வகித்தனார். முன்னாள் தலைவர் ரத்தினசுப்ரமணியன் முகாமை துவக்கி வைத்தார். தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை டாக்டர் பரத் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
முகாமில் இதய தொடர்பாக இ.சி.ஜி., எக்கோ பரிசோதனைக்குப் பின் சிறப்பு சிகிச்சை அளித்தனர். மேலும் சக்கரை நோய் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.