/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் மருத்துவ முகாம்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் மருத்துவ முகாம்
ADDED : ஆக 24, 2024 06:39 AM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில் நடந்த மக்களை தேடி மருத்துவ முகாமில் 900 க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லுாரியில், என்.சி.சி., நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், செஞ்சுருள் சங்கங்கள் மற்றும் ஆயங்குடி சுகாதார வட்டார மருத்துவ சுகாதார நிலையம் சார்பில், மக்களை தேடி மருத்துவ முகாம் நடந்தது.
கல்லூரி சேர்மன் கதிரவன் துவக்கி வைத்தார். முதல்வர் ஆனந்தவேலு, நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வெங்கடேசன், மருத்துவ அலுவலர் தமிழ்செல்வன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன். சுகாதார ஆய்வாளர்கள். இடைநிலை சுகாதார பணியாளர்கள், பெண் சுகாதார தன்னார்வலர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் 900 பேர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
இளைஞர் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் வேணுகோபால் நன்றி கூறினார்.