/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருத்துவ மாணவர்கள் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்
/
மருத்துவ மாணவர்கள் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 18, 2024 04:29 AM

சிதம்பரம் : கொல்கட்டா மருத்து மாணவி படுகொலையை கண்டித்து சிதம்பரத்தில், அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொல்கட்டாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நேற்று நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அதனையொட்டி, சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மாணவ மாணவிகள் பணியை புறக்கணித்து, கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லுாரி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மருத்துவர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் குலோத்துங்கசோழன், புலிகேசி, வானதி சிவக்குமார், வெங்கடேசன், பிரவீன், வலம்புரிச்செல்வன், ராமநாதன் உட்பட 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர்.
இறுதியில் ஊர்வலமாக சென்று கல்லுாரி துறைத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.