/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
உறுப்பினர் சேர்க்கை த.மா.கா., தீவிரம்
/
உறுப்பினர் சேர்க்கை த.மா.கா., தீவிரம்
ADDED : ஆக 11, 2024 05:06 AM

பண்ருட்டி, : பண்ருட்டியில் த.மா.கா., உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பண்ருட்டி பஸ் நிலையம் காமராஜர் சிலை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கி, த.மா.கா., உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் கணேசன், பண்ருட்டி நகர தலைவர் கனகராஜ், நெல்லிக்குப்பம் நகர தலைவர் விஜயன், தொரப்பாடி பேரூராட்சி தலைவர் மணி, அண்ணாகிராம ஓன்றிய தலைவர் கந்தன், அலுவலக நிர்வாகி பழனிசாமி, அண்ணா கிராம ஒன்றிய துணைத் தலைவர் செந்தில்குமார், வெற்றிவேல், மேல்கவரப்பட்டு அரசன், அண்ணா கிராமம் ஆறுமுகம், ஏரிப்பாளையம் சுரேஷ், கொங்கராயனூர் மணி, அண்ணா கிராம வட்டார தலைவர் ஏகாம்பரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

