
சிதம்பரம்: அ.தி.மு.க., அமைப்பு செயலாளர் முருகுமாறன் தந்தை புலவர் துரை நாகராசன் 12ம் ஆண்டு நினைவு தினம், தமிழ் வளர்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் எம்.எல்.ஏ., முருகுமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் வாசு முருகையன், சிவகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம் வரவேற்றார். புலவர் துரை நாகராசன் படத்திற்கு பாண்டியன் எம்.எல்.ஏ., மலர்துாவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம், ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன், மாவட்ட அவைத் தலைவர் குமார், பொருளாளர் தோப்பு சுந்தர், நிர்வாகிகள் ரெங்கம்மாள், செல்வம், ஜோதிபிரகாஷ், . நவநீதகிருஷ்ணன், அசோகன், செந்தில்குமார், செந்தில்குமார், தில்லை கோபி, டேங்க் சண்முகம், பாலசுப்ரமணியன், மணிகண்டன், பேராசிரியர் ரெங்கசாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜ், ராஜேந்திரன், சக்திவேல், மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.