/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவையில் முப்பெரும் விழா அமைச்சர் கணேசன் அழைப்பு
/
கோவையில் முப்பெரும் விழா அமைச்சர் கணேசன் அழைப்பு
ADDED : ஜூன் 13, 2024 12:22 AM

சிறுபாக்கம் : கோவையில் நடக்கும் தி.மு.க., முப்பெரும் விழாவில் பெருந்திரளாக பங்கேற்க அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
தி.மு.க., கடலுார் மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கணேசன் அறிக்கை:
கோவை, கொடிசியா மைதானத்தில், வரும் 15ம் தேதி கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழா, 40 லோக்சபா தொகுதிகளில் வெற்றி பெற்றுத் தந்த தமிழக மக்களுக்கும், வெற்றிக்கு வழிநடத்தி சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். எனவே, முப்பெரும் விழாவில் மேற்கு மாவட்ட தி.மு.க.,வினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.