/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டணி கட்சிகள் ஒரே குடும்பம் போல் வெற்றிக்காக பாடுபட வேண்டும் அமைச்சர் கணேசன் பேச்சு

ADDED : மார் 25, 2024 05:45 AM
கூட்டணி கட்சியோடு சேர்ந்து ஒரே குடும்பம் போல் செயல்பட்டு வெற்றி பெறவேண்டும் என வடலுாரில் நடந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார்.
கூட்டத்தில் அமைச்சர் கணேசன் பேசியதாவது:
கடலுார், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற எல்லோரையும் அரவணைத்து ஒரே குடும்பம் போல் கடுமையாக பாடுபட வேண்டும்.
தி.மு.க., ஆட்சியின் சாதனைகளான காலை உணவு திட்டம் ,மகளிர் உரிமை தொகை போன்ற திட்டங்களை, ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறி ஓட்டுக் கேட்க வேண்டும் . இந்தியாவில் மற்ற மாநிலங்கள் நம் முதல்வரின் திட்டங்களை பார்த்து அவர்கள் மாநிலத்தில் கொண்டு வரும் அளவிற்கு நல்லாட்சி செய்து வருகிறார்.
இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்க 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் .
வாக்குகள் மூன்று பிரிவாக பிரிந்து கிடக்கிறது நாம் ஈசியாக ஜெயித்து விடலாம் என அலட்சியமாக இருக்கக் கூடாது .நாம் கடுமையாக உழைத்து அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு பேசினார்.