sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாசனத்திற்கு கீழணையில் தண்ணீர் திறப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

/

பாசனத்திற்கு கீழணையில் தண்ணீர் திறப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

பாசனத்திற்கு கீழணையில் தண்ணீர் திறப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

பாசனத்திற்கு கீழணையில் தண்ணீர் திறப்பு அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு


ADDED : செப் 14, 2024 05:47 AM

Google News

ADDED : செப் 14, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில்: கீழணை மற்றும் வீராணத்தில் இருந்து பாசனத்திற்கு அமைச்சர் பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து வைத்தார்.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் கட்டப்பட்டுள்ளது கீழணை. இந்த அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வடவாறு, வீராணம் ஏரி, வடக்கு, தெற்கு ராஜன் வாய்க்கால்கள், குமுக்கி மண்ணியாறு, கோதண்டராமன் வாய்க்கால் என பல்வேறு வாய்க்கால் வழியாக மூன்று மாவட்ட பாசனத்திற்கு அனுப்பப்படுகிறது.

இதன் மூலம் கடலுார் மாவட்டத்தில் 92,854 ஏக்கரும், தஞ்சை மாவட்டத்தில் 1, 294 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 37,756 ஏக்கர் என ஒரு லட்சத்து 31ஆயிரத்து 904 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன.

கீழணை மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. அமைச்சர் பன்னீர்செல்வம் பூக்கள் துாவி தண்ணீர் திறந்து வைத்தார்.

வடவாற்றில் 1,000 கன அடி, வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களில் தலா 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, வீராணம் ஏரியில் இருந்து, ராதா மதகில் தண்ணீர் திறந்து வைத்தார்.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ., க்கள் அய்யப்பன், சிந்தனைச்செல்வன், அரசு கொறடா செழியன், சிதம்பரம் சப் கலெக்டர் ராஷ்மி ராணி, கொள்ளிடம் வடிநில கோட்ட சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன், வெள்ளாறு வடி நிலக் கோட்ட நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் மரியசூசை, உதவி செயற்பொறியாளர், கொளஞ்சிநாதன், உதவி பொறியாளர் கேசவராஜ், விவசாய சங்க தலைவர்கள் இளங்கீரன், விநாயகமூர்த்தி, ரவீந்திரன், சரவணன், ரங்கநாயகி பங்கேற்றனர்.

தேவையான உரம் இருப்பு

அமைச்சர் தகவல்

அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், சம்பா பருவத்திற்கு தேவையான உரம் மற்றும் இடுபொருட்கள் வேளாண் மையங்களில் போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

உரம் வாங்க வரும் விவசாயிகளிடம், கட்டயாப்படுத்தி வேறு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us