/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தலைவர்கள் நிறைந்த கடலுார் மாவட்டம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்
/
தலைவர்கள் நிறைந்த கடலுார் மாவட்டம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்
தலைவர்கள் நிறைந்த கடலுார் மாவட்டம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்
தலைவர்கள் நிறைந்த கடலுார் மாவட்டம் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் அமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள்
ADDED : மார் 25, 2024 05:44 AM
வடலுார்: கடலுார், சிதம்பரம் தொகுதி வேட்பாளர்களை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என வடலுாரில் நேற்று நடந்த தி.மு.க. கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
வடலுாரில் நேற்று மாலை நடந்த கடலுார் மாவட்ட தி.மு.க .கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது.
தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமைத்துள்ளோம் . இந்த கூட்டணி இப்போது தேர்தலுக்காக ஏற்பட்டதல்ல, நீண்ட ஆண்டுகளாக நம்முடன் இருந்தவர்களும் இந்த கூட்டணி அமைத்துள்ளோம்.
நாம் அனைவரும் வேறுபாடுகளை மறந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளை அரவணைத்து தேர்தல் பணி ஆற்ற வேண்டும். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், கடலுாரில் போட்டியிடும் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய, நகர, நிர்வாகிகள் தேர்தலுக்குப் பின்பு அவர்கள் பகுதியில் வாங்கிய ஓட்டுகள் குறைந்திருந்தால் கடுமையா நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இப்பல்லாம் யாரும் ஏமாத்த முடியாது .பட்டனை தட்டினால் எந்த ஒன்றியத்தில் எவ்வளவு ஓட்டுங்கள் என தெரிந்துவிடும்.
அதை மனதில் வைத்து கடுமையாக உழைக்க வேண்டும். வரும் 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சிதம்பரம், கடலுார் தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேச உள்ளார்.
தொடர்ந்து விழுப்புரத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்க உள்ளது இதில் தொகுதிக்கு 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும். 3 கடலுார் மாவட்டம் மாநிலத் தலைவர்கள் நிறைந்த மாவட்டம் வி.சி.கே., தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியை சேர்ந்தவர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன் திராவிட கழக தலைவர் வீரமணி ,மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் என தலைவர்கள் நிறைந்த மாவட்டம் .
இந்த மாவட்டத்தில் இரண்டு தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி
வேட்பாளர்களை வெற்றி பெற செய்து முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் பரிசாக அவருக்கு தர வேண்டும்.
இவ்வாறு பேசினார்.

