ADDED : ஆக 24, 2024 06:34 AM

சிதம்பரம்: மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற காட்டுமன்னார்கோவில் அரசு கல்லூரி, என்.சி.சி., மாணவியை வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டினார்.
காட்டுமன்னார்கோவில் அரசுகல்லூரி என்.சி.சி., மாணவி கீர்த்தனா. கல்லூரியில் 6 வது தமிழ்நாடு பெட்டாலியன் தேசிய மாணவர் படையில், என்.சி.சி., அலுவலர் சரவணன் தலைமையில் 20 மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில், ஆங்கிலத்துறை இரண்டாமாண்டு மாணவி, கீர்த்தனா, கோவையில் நடந்த 49 வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று 3 வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் பெற்றார். மேலும் மாநில அளவிலான போட்டிகளில், பெற்ற புள்ளிகளின், அடிப்படையில் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்ற மாணவி கீர்த்தனாவை, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டி, சால்வை அணிவித்தார். கல்லுாரி முதல்வர் மீனா, உடற்கல்வித்துறை இயக்குநர் சரவணன் உடனிருந்தனர்.

