/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அமைச்சர் சிவசங்கர் கடலுார் கோர்ட்டில் ஆஜர்
/
அமைச்சர் சிவசங்கர் கடலுார் கோர்ட்டில் ஆஜர்
ADDED : ஆக 08, 2024 10:54 PM
கடலுார்: மணல் குவாரி கலவரம் வழக்கில், போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கடலூர் கோர்ட்டில் நேற்று ஆஜரானார். வழக்கு 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடலுார் மாவட்டம் ஆவினங்குடி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட, வெள்ளாற்று பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு, மணல் குவாரி இயங்கியது. மணல் குவாரியை, அரியலூர் மற்றும் கடலூர் என, இரு மாவட்டத்தினர் சொந்தம் கொண்டாடி வந்தனர்.
அப்போதைய எம்.எல்.ஏ., சிவசங்கர் தலைமையில் குவாரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு கிராம மக்களுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது.
இதில் அரசு அதிகாரிகள் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. பலர் காயம் அடைந்தனர். இது குறித்து ஆவினங்குடி போலீசார், சிவசங்கர் உள்ளிட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு செய்து, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, கடலுார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
வழக்கில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று கடலுார் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, அவரது தரப்பில் டிஸ்ஜார்ஜ் பெட்டிஷன் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு நீதிபதி ஜவகர், வழக்கு சாட்சியங்கள் விசாரணைக்கு வந்த பின்னர் டிஸ்ஜார்ஜ் பெட்டிஷனை ஏற்க முடியாது என மறுத்தார். அதனால் அமைச்சர் தரப்பில் வக்கீல்கள் டிஸ்ஜார்ஜ் பெட்டிஷனை வாபஸ் பெற்றனர். நேற்று சாட்சிகள் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த மாதம் 29ம் தேதி ஆஜரானபோது, அமைச்சர் சிவசங்கருக்கு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.