/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார், சிதம்பரத்தில் 30, 31ல் அமைச்சர் உதயநிதி பிரசாரம்
/
கடலுார், சிதம்பரத்தில் 30, 31ல் அமைச்சர் உதயநிதி பிரசாரம்
கடலுார், சிதம்பரத்தில் 30, 31ல் அமைச்சர் உதயநிதி பிரசாரம்
கடலுார், சிதம்பரத்தில் 30, 31ல் அமைச்சர் உதயநிதி பிரசாரம்
ADDED : மார் 28, 2024 11:16 PM
கடலுார்: கடலுார், சிதம்பரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி வரும் 30, 31ம் தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.
இது குறித்த அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை;
இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வி.சி., வேட்பாளர் திருமாவளவன், கடலுார் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி கடலுார் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுப்படுகிறார்.
பிரசாரம் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் வரும் 30ம் தேதி மாலை 5:00 மணிக்கு கடலுார் தொகுதி, விருத்தாசலம் கடை விதியிலும், இரவு 7:00 மணிக்கு சிதம்பரம் தொகுதி, காட்டுமன்னார்கோவில் கடைவீதி நான்கு முனை சந்திப்பில் வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.
மறுநாள் 31ம் தேதி காலை 9:00 மணிக்கு சிதம்பரம் தெற்கு வீதியிலும், 10.30 மணிக்கு கடலுார் அண்ணா பாலம் சிக்னலிலும் பிரசாரம் செய்கிறார்.
நிகழ்ச்சியில் காங்., கம்யூ., கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள், தி.மு.க., மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணியினர் விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

