தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எம்.எல்.ஏ., அறிவுறுத்தல் தே.மு.தி.க.,வினர் மனு

எம்.எல்.ஏ., அறிவுறுத்தல் தே.மு.தி.க.,வினர் மனு

எம்.எல்.ஏ., அறிவுறுத்தல் தே.மு.தி.க.,வினர் மனு


ADDED : மே 26, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 26, 2026 04:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: பிரேமலதா எம்.எல்.ஏ., அறிவுறுத்தலின்பேரில், விருத்தாசலம் பி.டி.ஓ.,விடம் தே.மு.தி.க., சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்ற தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா சமீபத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பரவளூர் ஊராட்சி கச்சிபெருமாநத்தம் கிராமத்திற்கு சென்றபோது, குடிநீரில் உப்புநீர் கலந்து வருவதால் கிட்னி பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது. சுகாதாரமான குடிநீர் வசதி ஏற்படுத்திடத்தர கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து பிரேமலதா அறிவுறுத்தலின்பேரில், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் செம்பை தலைமையில் அக்கட்சியினர், விருத்தாசலம் பி.டி.ஓ., கணேசனிடம் மனு கொடுத்தனர். அதில், கிராமத்தில் நேரில் ஆய்வு செய்து, குடிநீரின் தன்மையை பரிசோதிக்க வேண்டும். மேலும், சுகாதரமான குடிநீர் விநியோகம் உறுதிசெய்யப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மனு மீது துரிதமாக நடவடிக்கை எடுப்பதாக பி.டி.ஓ., உறுதியளித்தார். நிர்வாகிகள் ஜெயராஜ், ராமச்சந்திரன், வேல்முருகன், ராஜ்குமார், சங்கர், ரமேஷ், பாலா, ஜானகிராமன் உள்ளிட்டோர் உடனிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us