ADDED : ஜூன் 03, 2026 04:31 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் அடிப்படை தேவைகள் குறித்து பிரேமலதா எம்.எல்.ஏ., நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
விருத்தாசலம் நகராட்சி பகுதிகளில் உள்ள அடிப்படை தேவைகள் குறித்து பிரமலதா எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அடிப்படை விபத்து நடக்கும் கோ.பொன்னேரி புறவழி சாலையை பார்வையிட்டார். அதன்பின், பெரியார் நகரில் உள்ள நகராட்சி பூங்காவை ஆய்வு செய்து, அப்பகுதி மக்களிடம் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின், இரவு நேரங்களில் இருளில் மூழ்கியுள்ள விருத்தாசலம் – கடலுார் சாலையில் உள்ள மேம்பாலத்தினை பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன்கடைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, விருத்தாசலம் ஒன்றியத்தில் ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது நகர செயலர் ராஜ்குமார், மாவட்ட துணை செயலர் வேல்முருகன், நகர தலைவர் சங்கர், பொருளாளர் கரணா, மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி பாலா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
