தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எம்.எல்.ஏ., அலுவலகம்  புதுப்பிப்பு பணி தீவிரம்

எம்.எல்.ஏ., அலுவலகம்  புதுப்பிப்பு பணி தீவிரம்

எம்.எல்.ஏ., அலுவலகம்  புதுப்பிப்பு பணி தீவிரம்


ADDED : மே 23, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் எம்.எல்.ஏ., அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

விருத்தாசலம் பெரியார் நகரில் எம்.எல்.ஏ., அலுவலகம் உள்ளது. சட்டசபை தேர்தல் நடத்தை விதிமுறையாக எம்.எல்.ஏ., அலுவலகம் சீல் வைக்கப்பட்ட நிலையில், முன்னாள் காங்., எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து அலுவலகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் அகற்றப்பட்டன.

இந்நிலையில், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா வெற்றி பெற்ற நிலையில், எம்.எல்.ஏ., அலுவலகம் புதுப்பிக்கப்படாமல் இருந்தது. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த பிரேமலதா எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டிக்கிடப்பதை பார்த்து அதிருப்தி அடைந்தார்.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் சீரமைக்கப்பட்டதும், பிரேமலதா எம்.எல்.ஏ., அலுவலகத்தை திறந்து வைப்பார் என தெரிகிறது.

சீரமைப்பு பணிகளை தே.மு.தி.க., நகர செயலாளர் ராஜ்குமார், நகர தலைவர் சங்கர், துணை செயலாளர் சரவணன், மோகன், பார்த்திபன் உள்ளிட்டோர் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us