தொகுதி வளர்ச்சி பணிகள் கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை
தொகுதி வளர்ச்சி பணிகள் கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : மே 29, 2026 08:41 PM
பண்ருட்டி: பண்ருட்டி தொகுதி வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டரிடம் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்தார்.
பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக மோகன் வெற்றி பெற்ற பின் நேற்று கடலுார் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை அவர் சந்தித்து, பூங்கொத்து வழங்கினார்.
தொடர்ந்து, தொகுதியின் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டரிடம் மோகன் பேசினார். இதில், பண்ருட்டியில் மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும்; தொகுதியில் மனைபிரிவில் பூங்காவிற்கு ஓதுக்கிய இடங்களில் பூங்கா அமைத்திட வேண்டும்; நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை கழிவால் குடிநீரில் அழுக்கு கலந்து வருவதால் ஆய்வு செய்திட வேண்டும்;
பண்ருட்டி அரசு மருத்துவமனையில் போதிய உபகரணங்கள் வழங்க வேண்டும்; நெல்லிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரவு நேரத்தில் பணிபுரிய டாக்டர்கள் நியமித்திட வேண்டும்; திரிமங்கலம் கிராமத்தில் நேரடி கொள்முதல் நிலையம், வரும் 15 ம் தேதி வரை கொள்முதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்; என்பன உள்ளிட்டவை குறித்து தெரிவித்தார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் உறுதியளித்தார்.
