/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் பிறந்த நாள் விழா எம்.எல்.ஏ., வேண்டுகோள்
/
முதல்வர் பிறந்த நாள் விழா எம்.எல்.ஏ., வேண்டுகோள்
ADDED : மார் 04, 2025 03:00 AM

கடலுார் : தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டு மென, அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை:
தமிழக முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்த நாள் விழாவை ஒரு மாதத்திற்கு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும். தினமும் ஒரு அறிவிப்பு செய்து, அதை சட்டமாக்கி ஏழைகள் வாழ்வதற்கு பாடுபடும் முதல்வர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட உறுதியேற்க வேண்டும்.
இன்று (4ம் தேதி) எனக்கு பிறந்த நாள். இன்றைய தினம் திண்டுக்கல் மற்றும் தேனியில் அரசு சார்பில் எம்.எல்.ஏ.,க்கள் குழு அடங்கிய பொது கணக்கு குழுக் கூட்டம் நடக்கிறது. அதில் நான் பங்கேற்க செல்வதால் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க யாரும் நேரில் வர வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.