/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடமாடும் உணவு பகுப்பாய்வகம் விருத்தாசலத்தில் விழிப்புணர்வு
/
நடமாடும் உணவு பகுப்பாய்வகம் விருத்தாசலத்தில் விழிப்புணர்வு
நடமாடும் உணவு பகுப்பாய்வகம் விருத்தாசலத்தில் விழிப்புணர்வு
நடமாடும் உணவு பகுப்பாய்வகம் விருத்தாசலத்தில் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 17, 2024 12:07 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் வந்த நடமாடும் உணவு பகுப்பாய்வகத்தில், 25 கடைகளின் உணவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சென்னை கிண்டி உணவு பகுப்பாய்வு மையம் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வகம் மூலம் உணவின் தரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நேற்று பயணிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உணவு பாதுகாப்பு அலுவலர் சுந்தரமூர்த்தி, உணவு பகுப்பாய்வு இளநிலை ஆய்வாளர் சரவணன் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், விருத்தாசலத்தில் உள்ள ஓட்டல்கள், இனிப்பகங்களில் இருந்து 25 உணவுகள் பகுப்பாய்வுக்கு கொடுத்தனர். அவர்களிடம் உணவு மாதிரி, பெயர், மொபைல் எண் ஆகியன பெறப்பட்டன. ஆய்வுக்குப் பின் குறிப்பிட்ட உணவுகளை பயன்படுத்தலாமா அல்லது வேண்டாமா என அறிவுறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கடலுார், சிதம்பரம், நெல்லிக்குப்பம் பகுதிகளில் முடிவடைந்த நிலையில், அடுத்த வாரம் காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, கம்மாபுரம் பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிது.
ஓட்டல், பேக்கரி உரிமையாளர் நலச்சங்க தலைவர் சிவக்குமார், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் முத்து, நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், பாலன், பன்னீர்செல்வம், முரளி, ரவி, பாசில் உடனிருந்தனர்.