/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மொபைல் போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை
/
மொபைல் போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : மே 25, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுாரில் முகவரி கேட்பது போல் நடித்து மொபைல் போன் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலுார், வெளிச்செம்மண்டலத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 50; இவர், நேற்று முன்தினம் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், செந்தில்குமாரிடம் முகவரி கேட்பது போல் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென செந்தில்குமார் சட்டைப் பையில் இருந்த மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பினர். செந்தில்குமார் துரத்திச் சென்றும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கடலுார், புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

