/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மோடி பிரதமராக பதவியேற்பு; இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
/
மோடி பிரதமராக பதவியேற்பு; இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மோடி பிரதமராக பதவியேற்பு; இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மோடி பிரதமராக பதவியேற்பு; இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ADDED : ஜூன் 10, 2024 01:18 AM

மந்தாரக்குப்பம் : கம்மாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதிவியேற்றதை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.
மந்தாரக்குப்பம் கடைவீதியில் நேற்று இரவு வெற்றி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு, பா.ஜ., கம்மாபுரம் தெற்கு ஒன்றிய தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் முருகன். ஓ.பி.சி., அணி மாவட்ட செயலாளர் ரவீந்திரன், பேரூராட்சி கவுன்சிலர் தங்கமணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ், ஏழுமலை முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொதுச் செயலாளர் ரங்ரகாஜன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சண்முகம் அன்னதானம் வழங்கினார்.
மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத், காந்திராஜ், மாவட்ட செயலாளர்கள் கல்யாணசுந்தரம், திருமாவளவன், தொழில்நுட்ப பிரிவு தலைவர் ராஜேஷ், சேப்ளாநத்தம் ஊராட்சி தலைவர் ஆசைதம்பி, ஒன்றிய நிர்வாகிகள் செல்வமோகன், ஸ்ரீராம், அரவிந்தன், சுப்பிரமணியன், செஞ்சிவேல், ஆறுமுகம், ராமசந்திரன், பாலகிருஷ்ணன், அருள்ஜோதி, ராகுல், ராஜ்குமார், கலியபெருமாள், அப்கரன், கெளரிசங்கர், செல்வம் பங்கேற்றனர்.
ஒன்றிய பொதுச் செயலாளர் தேவப்பெருமாள் நன்றி கூறினார்.