ADDED : ஆக 18, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி அடுத்த தம்பிக்கு நல்லான்பட்டினம் பகுதியில் குரங்கு தொல்லை அதிகரிப்பால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
புவனகிரி அருகே தம்பிக்கு நல்லாம்பட்டினம் பகுதியில் குரங்கு நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் வீடுகளில் புகுந்து பொருட்களை எடுத்து துவம்சம் செய்வதுடன், மா, தென்னை மற்றும் வாழை மரங்களில் உள்ள பிஞ்சுகளை சேதமாக்கி வருகிறது.
மேலும், சாலையில் சுற்றித் திரிவதால், கடலூர்- சிதம்பர சாலையில் விபத்துக்கள் நடந்து வருகிறது. எனவே, இப்பகுதியில் சுற்றி திரியும் குரங்குகளை பிடித்து காப்பு கட்டில் விட, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.