/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குரங்குகள் தொல்லை பொதுமக்கள் அச்சம்
/
குரங்குகள் தொல்லை பொதுமக்கள் அச்சம்
ADDED : ஆக 21, 2024 07:39 AM
விருத்தாசலம: விருத்தாசலம் நகர பகுதிகளில் சுற்றித்திரியும் குரங்குகளால் பொதுமக்கள், குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஒருலட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றர். இந்த நகரத்தில் உள்ள அரசு கலை கல்லுாரி, செராமிக் தொழிற்பேட்டை, வணி நிறுவனங்களுக்கு தினசரி பல்லாயிர கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், விருத்தாசலம் கடைவீதி, பாலக்கரை, அரசு கலை கல்லுாரி, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. மேலும், கடை, வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகளில் குரங்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.
இதனால், பொதுமக்கள் தினசரி கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, விருத்தாசலம் நகர பகுதிகளில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடித்து காப்புகாட்டில் விட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

