/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி அருகே காற்றுடன் கன மழை 50க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன

ADDED : ஆக 12, 2024 05:50 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றிய பகுதியில் 5 கிராமங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழையால் 50க்கும்் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன.
கடலுார் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியம், அக்கடவல்லி, கொரத்தி உள்ளிட்ட கிராமங்களில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதில் கிராமங்களில் பல இடங்களில் சாலை, விவசாய பகுதியில் இருந்த பழமையான மரங்கள் வேறொடு சாய்ந்தன.
இதில் டிரான்ஸ்பார்மர் மற்றும் 50 க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. இப்பகுதியில் 10க்கும் குடிசை வீடுகள் இடிந்து சேதமாகி உள்ளன.
தகவலறிந்த மின் ஊழியர்கள் நேற்று காலை முதல் சிறப்பான பணிகள் செய்து நேற்று மாலை வீடுகளுக்கு மின்சாரம் வழங்கினர்.
இருந்தாலும் விவசாய பகுதிகளுக்கு செல்லும் மின் இணைப்புகள் பல இடங்களில் சாய்ந்துள்ளது. மேலும் காற்றில் விவசாய மின் இணைப்பு மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
சாய்ந்த மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்களை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.