/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தைகளுடன் தாய் மாயம் விருத்தாசலம் அருகே பரபரப்பு
/
குழந்தைகளுடன் தாய் மாயம் விருத்தாசலம் அருகே பரபரப்பு
குழந்தைகளுடன் தாய் மாயம் விருத்தாசலம் அருகே பரபரப்பு
குழந்தைகளுடன் தாய் மாயம் விருத்தாசலம் அருகே பரபரப்பு
ADDED : மே 28, 2024 05:00 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே இரு குழந்தைகளுடன் மாயமான தாயை போலீசார் தேடிவருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் ராஜிவ்காந்தி,40; இவரது மனைவி மீனா,33; இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் ரட்சனா,9; சாதனா,9; மகன் நித்திஷ்,7; உள்ளனர்.
ராஜிவ்காந்தி கடந்த 2 ஆண்டாக வௌிநாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். கடந்த 5ம் தேதி இரவு 8:30 மணியளவில், கணவரிடம் போனில் பேசிய மீனா, குழந்தைகள் சாதனா, நித்திஷ் ஆகியோருடன் தனது தாய் வீட்டிற்கு செல்வதாகக் கூறியுள்ளார். மற்றொரு குழந்தை ரட்சனாவை, ராஜிவ்காந்தி வீட்டில் உள்ள உறவினர்களிடம் விட்டுச் சென்றார்.
ஆனால், குழந்தைகளுடன் சென்ற மீனா தாய் வீட்டிற்கு செல்லாது தெரிந்தது. இது குறித்து மீனாவின் தாய் ரபேல்,55; அளித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து குழந்தைகளுடன் மாயமான தாயை தேடிவருகின்றனர்.