ADDED : ஆக 07, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடத்தப்பட்ட மகளை மீட்டுத் தரக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் தாய் மனு அளித்தார்.
திட்டக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார். மனுவில், 'தனது 17 வயது மகளை 40 வயது வாலிபர் கடத்திச் சென்று விட்டார்.மகளை மீட்டுத்தரக் கோரி ஆவினங்குடி காவல் நிலையத்தில் மனு அளித்தும் இதுவரைஎந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தனிப்படை அமைத்து மகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.