/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தெருவிளக்குகள் எரியாததால் வாகன ஒட்டிகள் அச்சம்
/
தெருவிளக்குகள் எரியாததால் வாகன ஒட்டிகள் அச்சம்
ADDED : ஜூன் 08, 2024 04:54 AM
மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் கடைவீதியில் தெரு விளக்குகள் எரியாததால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஒட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள கடைவீதி வழியாக ஆயிரக்கணக்கான பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன.
கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சாலையில் இரு புறமும் தெரு விளக்குகள் கடந்த 10 நாட்களுக்கு மேல் எரியாமால் உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் சாலையில் அச்சத்துடன் செல்லும்நிலை உள்ளது. எனவே, கடை வீதியில் தெரு விளக்குகளை சீரமைக்க கெங்கைகொண்டான் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.