/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையில் மண் குவியல்; வாகன ஓட்டிகள் பாதிப்பு
/
சாலையில் மண் குவியல்; வாகன ஓட்டிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 10, 2024 01:15 AM

கடலுார் : கடலுார்-நெல்லிக்குப்பம் சாலை சென்டர் மீடியனில் மண் குவியலால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடலுார்-நெல்லிக்குப்பம் சாலை வழியாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், பண்ருட்டி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் செம்மண்டலத்தில் இருந்து சாவடி வரை உள்ள சென்டர் மீடியன் இருபுறங்களிலும் மண் அதிகளவில் குவிந்துள்ளது.
இந்த மண் காற்றில் பறப்பதாலும், கனரக வாகனங்கள் செல்லும்போதும் புழுதி ஏற்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களை கசக்கியப்படி, செல்லும் நிலை நீடித்து வருகிறது.
இதனால், சில வாகன ஓட்டிகள் மணலில் வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, சாலையில் குவிந்துள்ள மண் குவியலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.