/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் உயர் கல்வி விழிப்புணர்வு
/
எம்.ஆர்.கே., கல்லுாரியில் உயர் கல்வி விழிப்புணர்வு
எம்.ஆர்.கே., கல்லுாரியில் உயர் கல்வி விழிப்புணர்வு
எம்.ஆர்.கே., கல்லுாரியில் உயர் கல்வி விழிப்புணர்வு
ADDED : மே 02, 2024 11:26 PM

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல் கல்லூரியில் பிளஸ் 2 முடித்து, கல்லூரியில் சேரக் கூடிய மாணவர்களுக்கான உயர் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி சேர்மன் கதிரவன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் சிவப்பிரியா வரவேற்றார். திருச்சி, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை முன்னாள் தலைவர் பாலசிங் மோசஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
புதுச்சேரி கேரியர் கிராப்ட் அகாடமி நுண்ணறிவு நிபுணர் ஆசிஸ், ட்ரோன் நிபுணர் சுபம்கவுஷிக் ஆகியோர் பேசினர். கல்லூரி மேலாளர் விஸ்வநாத், முதல்வர் ஆனந்தவேலு மற்றும் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ராஜகணபதி நன்றி கூறினார்.