/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சி கமிஷனரின் 'அதிரடி' ஆடிப்போன கவுன்சிலர்கள் 'கப்சிப்'
/
மாநகராட்சி கமிஷனரின் 'அதிரடி' ஆடிப்போன கவுன்சிலர்கள் 'கப்சிப்'
மாநகராட்சி கமிஷனரின் 'அதிரடி' ஆடிப்போன கவுன்சிலர்கள் 'கப்சிப்'
மாநகராட்சி கமிஷனரின் 'அதிரடி' ஆடிப்போன கவுன்சிலர்கள் 'கப்சிப்'
ADDED : செப் 18, 2024 05:58 AM
கடலுார் மாநகராட்சி கமிஷனரின் அதிரடி பேச்சால், மாநகர கூட்டத்தில் பிரச்னை செய்ய காத்திருந்த கவுன்சிலர்கள் 'கப்சிப்' என அமைதியாக அமர்ந்தனர்.
கடலுார் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் என்றாலே காரசாரம், போராட்டம், போலீஸ் பாதுகாப்பு என்பதுதான் மேலோங்கி இருக்கும். ஆனால் நேற்று நடந்த கூட்டம் எந்த காரசாரமும் இல்லாமல் அமைதியாக முடிந்தது.
கடலுார் மாநகராட்சியாக அரசு தரம் உயர்த்தப்பட்ட பின்பும், நகராட்சி கமிஷனர்களே, மாநகராட்சி கமிஷனராக தொடர்ந்து பொறுப்பில் இருந்து வந்தனர். அண்மையில் தான் கடலுார் மாநகராட்சிக்கு புதிதாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அனுவை கமிஷனராக அரசு நியமித்தது.
இதற்கு முன்பு நகராட்சி கமிஷனராக பதவியில் இருந்தபோது நடந்துவந்த பல பிரச்னைகள் தாமாகவே முடிவுக்கு வந்துவிட்டன.
இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி கமிஷனராக பொறுப்பேற்ற பின் முதற்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. துவக்கத்திலேயே பிரச்னைகள் பற்றி பேச சில கவுன்சிலர்கள் இடையே போட்டி இருந்தது. கமிஷனர் அனுவின் முதற்கட்ட பேச்சில், தாறுமாறாக பேசலாம் என எண்ணி இருந்தவர்கள் அமைதியாகினர்.
அதாவது, கோரிக்கை குறித்து பேச நினைப்பவர்கள் மேயரிடம் அனுமதியுடன்தான் பேச வேண்டும். ஒரே நேரத்தில் 2 அல்லது 3 கவுன்சிலர்கள் பேச முயற்சித்தாலும், மேயர் யாரை பேச அனுமதி அளிக்கிறாரோ அவர்கள் தான் பேச வேண்டும் என, அதிரடி கண்டிஷன்கள் போட்டார்.
அதைத்தொடர்ந்து தாறுமாறாக பேச நினைத்தவர்களும், பிரச்னை செய்ய நினைத்தவர்களின் எண்ணமும் தவிடுபொடியாகியது.
அதைத்தொடர்ந்துதான் உண்டியல் எடுத்து வந்த பா.ம.க, கவுன்சிலரை, இதேப்போல தொடர்ந்து செய்தால் 2 கூட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டார்.