ADDED : ஆக 23, 2024 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : சொத்து தகராறில் வாலிபரை அடித்து கொலை செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் அடுத்த காவலுார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் மகன் சரவணன்,24; இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த உறவுக்கார 17 வயது சிறுவனுக்கும் சொத்து பிரச்னை இருந்து வந்தது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் சிறவன் தாக்கியதில் சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து, சிறுவனை நேற்று கைது செய்து திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலுார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.