/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி 'ஜரூர்'
/
அருங்காட்சியகம் புதுப்பிக்கும் பணி 'ஜரூர்'
ADDED : மே 15, 2024 11:28 PM

கடலுார்: கடலுார் அரசு அருங்காட்சியகம் ரூ. 50 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.
கடலுார் மஞ்சக்குப்பம் பழயை கலெக்டர் அலுவலகத்தில் ஒரு பகுதியில் அரசு அருங்காட்சியகம் இயங்கி வருகிறது. இங்கு மாவட்ட வரலாறு, கலாசாராம், அரிய வகை தாவரங்கள், விலங்குகள், பழமையான கல் சிற்பங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆய்வாளர்கள் பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்நிலையில், அருங்காட்சியகத்தை புதுப்பிக்க துறை வாயிலாக, ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதையடுத்து, பணிகள் கடந்த மார்ச் மாதம் துவங்கி நடந்து வருகிறது. அருங்காட்சியக சுவர்கள் சீரமைப்பு பணிகள் முடிந்து, பெயிண்டிங் செய்யப்பட்டு, மின் விசிறிகள், வண்ண விளக்குகள், தரை விரிப்புகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அருங்காட்சியகத்தின் நுழைவு வாயில் பகுதியில் சிலைகளை முறையாக வைக்கும் வகையில், மேடை அமைக்கும் பணி துவங்கியது.
அதற்காக கற்சிலைகள் கிரேன் மூலம் அகற்றப்பட்டு பாதுகாப்பாக வேறு இடத்தில் மாற்றம் செய்யப்பட்டன.