/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குப்பநத்தம் விவசாயிகளுக்கு காளாண் வளர்ப்பு பயிற்சி
/
குப்பநத்தம் விவசாயிகளுக்கு காளாண் வளர்ப்பு பயிற்சி
குப்பநத்தம் விவசாயிகளுக்கு காளாண் வளர்ப்பு பயிற்சி
குப்பநத்தம் விவசாயிகளுக்கு காளாண் வளர்ப்பு பயிற்சி
ADDED : மே 02, 2024 11:22 PM
விருத்தாசலம்: குப்பநத்தம் கிராம விவசாயிகளுக்கு வேளாண் மாணவர்கள் சார்பில் காளாண் வளர்ப்பு குறித்து பயிற்சி நடந்தது.
வேப்பூர் அடுத்த கழுதுார் ஜெ.எஸ்.ஏ., வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அவர்கள், கிராம மக்களுக்கு காளாண் வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வராணி தலைமை தாங்கினார்.
உதவி பேராசிரியர் (தாவரவியல் துறை) மோகனப்ரியா தலைமையில் இறுதியாண்டு மாணவர்கள் இளங்கோ, இசைஇன்பண், இறையன்பு, கணேஷ்குமார், கிரிதரன், கோபிநாத், குகன், குணப்ரியன், ஹரிபிரசாத் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
கல்லுாரி முதல்வர் லட்சுமணன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, சுந்தரவடிவு, திட்ட பொறுப்பாளர்கள் சுகந்தி, ப்ரீத்தி உட்பட கிராம மக்கள், விவசாயிகள் உடனிருந்தனர்.