/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தகிரீஸ்ரவர் கோவிலில் இசையாஞ்சலி விழா
/
விருத்தகிரீஸ்ரவர் கோவிலில் இசையாஞ்சலி விழா
ADDED : ஏப் 25, 2024 03:49 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இசையாஞ்சலி விழா நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், திருமுதுகுன்றம் இசைச்சங்கம் சார்பில், கடந்த 19ம் தேதி இசையாஞ்சலி விழா துவங்கியது.
விழாவிற்கு, சங்க தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெகநாதன், பொருளாளர் அருள் முன்னிலை வகித்தனர்.
இசையாஞ்சலி செயலாளர் சுந்தரவடிவேல் வரவேற்றார்.
கடந்த 19ம் தேதி எடஅன்னவாசல் மங்கல லய நாத தம்பதியினர் மணிசங்கர், ஜெயந்தி சங்கர், சிறப்பு தவில் அமிர்தவர்ஷினி மணிசங்கர் ஆகியோரின் நாத சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 20ம் தேதி திருமுறை இசை நிகழ்ச்சி, கடந்த 21ம் தேதி நாட்டியாஞ்சலி, கடந்த 22ம் தேதி கருவி இசை நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, மஹதி குழுவினரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியுடன் இசையாஞ்சலி விழா நிறைவடைந்தது.

